கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு - தமிழகம் முதலிடம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நாளுக்கு நாள் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு - தமிழகம் முதலிடம்
x
உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. ே மாதம் முதல் தினந்தோறும் சராசரியாக 20 ஆயிரம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை, ஜூன் மாதத்தில் 40 ஆயிரமாகவும், ஜூலையில் தினசரி 50 ஆயிரம் பேர் வரையும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் மாத இறுதியில், 2 ஆயிரத்து 354 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்த நிலையில், ஏப்ரல் மாத முடிவில் ஒரு லட்சத்து19 ஆயிரத்து 748 பேருக்கும் மே மாத இறுதியில் 4 லட்சத்து 91ஆயிரத்து 961 பேருக்கு சோதனை நடந்த நிலையில், ஜூன் இறுதியில்11 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்தது. இதன் மூலம், நாட்டில், 20 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்த முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. 


Next Story

மேலும் செய்திகள்