11-ம் வகுப்பில் தோல்வியுற்றாலும் பாஸ் முறை ரத்து?

11-ம் வகுப்பில் தோல்வியுற்றாலும் 12-ம் வகுப்பில் படிக்கலாம் என்று, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட திட்டம், நடைமுறை ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.
11-ம் வகுப்பில் தோல்வியுற்றாலும் பாஸ் முறை ரத்து?
x
11-ம் வகுப்பில் தோல்வியுற்றாலும் 12-ம் வகுப்பில் படிக்கலாம் என்று, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட திட்டம், நடைமுறை ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் இந்த திட்டம் ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

* 11-ம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிப்பதால் ஒரு ஆண்டு வீணாகிறது என்பதை கருத்தில் கொண்டு,

* சில பாடங்களில் தோல்வியுற்றாலும் பன்னிரண்டாம் வகுப்புக்கு செல்லலாம் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

* அந்த வகையில் 11-ம் வகுப்பில் தோல்வியுற்ற 4 ஆயிரம் மாணவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு சென்றனர். 

* அவர்கள் இந்த ஆண்டு பொது தேர்வையும் எழுதி இருக்கிறார்கள். 

* இந்த நிலையில், இந்த நான்காயிரம் மாணவர்களில் பலர் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலும், 11ம் வகுப்பில் தோல்வி என்ற நிலை இருந்தால், மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியாது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

* 11-ம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அசல் மதிப்பெண் சான்றிதழ் கிடைக்காது என்பதால்,மேற்கொண்டு எந்த படிப்பையும் மாணவர்கள் மாணவர்களால் தொடர இயலாது.

* இந்த  நடைமுறை சிக்கல் மாணவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துவதால், இந்த திட்டத்தை ரத்து செய்து விடலாமா என்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்