பள்ளி மாணவனை காவல்துறையினர் தாக்கிய சம்பவம்:"கோவை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" - மனித உரிமை ஆணையம் உத்தரவு

பள்ளி மாணவனை போலீசார் தாக்கிய சம்பவத்தில் கோவை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவனை காவல்துறையினர் தாக்கிய சம்பவம்:கோவை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
கோவை ரத்தினகிரி பகுதியில் டிபன் கடை நடத்தி வந்தவர்களிடம், கடையை மூடும்படி, அப்பகுதி உதவி ஆய்வாளர் செல்லமணி கூறியுள்ளார். இதை கடைக்காரரின் மகன் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார், மாணவனின் செல்போனை பறித்துக் கொண்டு வாகனத்தில் கிளம்ப தயாரானார். அப்போது மாணவன் வழிமறித்ததில் ஆத்திரமடைந்த போலீசார், மாணவனை லத்தியால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த செய்தி நாளிதழிலும் வெளியான நிலையில்,  மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோவை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்