சாத்தான்குளம் விவகாரம் - சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை, சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் விவகாரம் - சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
x
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

* நீதித்துறை நடுவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதற்காக, தூத்துக்குடி மாவட்ட ASP குமார், DSP  பிரதாபன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

* நீதிபதியை மரியாதைக் குறைவாக பேசியதாக காவலர் மகாராஜன் மீது, குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக தாக்கல் செய்தது. 

* இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மூவரும் நேரில் ஆஜராகினர். 

* அவர்கள் தனியே வழக்கறிஞர்களை நியமித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* இந்த வழக்கில், சிபிஐ பலவித அனுமதிகளைப் பெற்று விசாரணை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

* இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை என்றும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

* ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது, சிபிஐ விசாரணையை துவக்கும் வரை நெல்லை சரக டிஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது நெல்லை சிபிசிஐடி  விசாரணையை கையில் எடுக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

* இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

* அப்போது நெல்லை சரக டிஐஜி விசாரிக்கலாம் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

* அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நெல்லை சரக டிஐஜி 3 மாவட்டங்களுக்கு பொறுப்பு என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இருக்கும், அவருக்கு விசாரணை பணியை வழங்கினால் கூடுதல் சிரமமாக இருக்கும் என கூறியுள்ளனர்.

* நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார்  வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,

* விசாரணையை உடனடியாக கையிலெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

* இந்த வழக்கை பொறுத்தவரை உடற்கூறு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில், இதில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

* அதன் அடிப்படையில், சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் வரை   சிபிசிஐடி விசாரணை நடத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்