சாத்தான்குளம் சம்பவம் : தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி இ மெயிலில் புகார்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு இ மெயிலில், தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் அளித்துள்ளார்.
சாத்தான்குளம் சம்பவம் : தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி இ மெயிலில் புகார்
x
சாத்தான்குளம் சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி இ மெயில் மூலம் புகார் அளித்துள்ளார். தமது தொகுதிக்கு உட்பட்ட சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை, மகன் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்துள்ளதாகவும் 58 வயதான ஜெயரா​ஜ் மற்றும் 31 வயதான பென்னிக்ஸ்  இருவரும் அங்கு 10 ஆண்டுகளாக தொழில் செய்து வருவதோடு, சமூகத்திலும் மரியாதை உடன் இருந்து வந்ததாகவும் கனிமொழி சுட்டிக்காட்டி உள்ளார். ஊரடங்கு உத்தர​வை மீறியதாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரை பார்க்கச் சென்ற அவரது மகன் பென்னிக்ஸ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்த சாத்தான் குளம் போலீசார் இருவரையும் சிறைப் பிடித்ததாகவும் இரவில் நடத்திய விசாரணையின்போது, பென்னிக்ஸின் ஆசனவாயிலில் லத்தியை நுழைத்து கடுமையாக தாக்கியதில் ரத்தம் பீறிட்டுள்ளது என்றும், இதேபோல, ஜெயராஜின் மார்பில் பூட்ஸ் காலால் மாறி மாறி  மிதித்ததில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழ​ந்து உள்ளதாகவும் கனிமொழி அதில் கூறியுள்ளார். மேலும், அரசு மருத்துவரை மிரட்டி இருவர் உடல் நிலையும்ம நன்றாக உள்ளதாக சான்றிதழ் வாங்கிய சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர்.  நீதிபதி முன்பு 50 மீட்டர் இடைவெளியில் இருவரையும் நிறுத்தி ரிமாண்ட் உத்தரவு பெற்றதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அரசு அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 15 லாக் அப் சாவுகள் நடைபெற்ற நிலையில், இந்த சம்பவத்திலாவது விரைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் செயல்பட வேண்டும் என கனிமொ​ழி வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்