கணவன் மட்டன் பிரியாணிக்கு பதில், குஸ்கா வாங்கி வந்ததால் மனைவி, தீக்குளித்து தற்கொலை
பதிவு : ஜூன் 26, 2020, 10:20 AM
கணவன் மட்டன் பிரியாணிக்கு பதில், குஸ்கா வாங்கி வந்ததால் விரக்தியடைந்த மனைவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர், மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கூடத்தில் சிற்பியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சவுமியா.  இந்நிலையில் சவுமியா தனது கணவனிடம் மட்டன் பிரியாணி சாப்பிட ஆசையாக உள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து மனைவியின் ஆசையை நிறைவேற்ற , மட்டன் பிரியாணி வாங்க ஓட்டலுக்கு சென்றார் மனோகரன். ஆனால், ஏனோ மட்டன் பிரியாணிக்கு பதில் குஸ்கா வாங்கி வந்துள்ளார் மனோகரன்.மட்டன் பிரியாணி தான் என எண்ணி பொட்டலத்தை பிரித்து பார்த்த சவுமியாவுக்கு, குஸ்கா இருந்ததை பார்த்து கவலை அடைந்துள்ளார். மேலும்  அதனை சாப்பிட மறுத்துள்ளார். இதனால் அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனோகரன் வீட்டிருந்து வெளியில் சென்றுள்ளார். அப்போது, சவுமியா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சவுமியாவை தீக்காயத்துடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால்,  அங்கு சிகிச்சை பலனின்றி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

141 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

54 views

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை

தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

45 views

பிற செய்திகள்

"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது" - உதயநிதி ஸ்டாலின்

பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

20 views

"பெரியார் சிலை அவமதிப்பு - கடும் நடவடிக்கை தேவை" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தந்தை பெரியார் சிலையை அவமதித்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

59 views

விவசாயிக மசோதாக்கள் விவகாரம்: "நிலைப்பாட்டை மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்" - கமல்ஹாசன் எச்சரிக்கை

விவசாய மசோதா தொடர்பான திருத்தங்களை ஏற்காவிட்டால் மக்கள் திருத்துவார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

7 views

பெரியார் சிலை அவமதிப்பு : "அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்" - வைகோ கண்டனம்

திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ "அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

33 views

"முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்" - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்

திருச்சி இனாம் குளத்தூரில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1244 views

பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி - சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

207 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.