தொடர் திருட்டில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் கைது - 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஆவடி அருகே தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
தொடர் திருட்டில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் கைது - 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x
ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வாகன திருட்டு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து அம்பத்தூர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் , கருணாகரச்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை விசாரித்த போது, அவரிடம் ஆவணம் எதுவும் இல்லை என்பதால் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். விசாரணையில் அவர் நவஜீவன் நகரை சேர்ந்த நரேஷ் என்பது தெரியவந்தது. கடந்த ஒராண்டாக கார் ஓட்டுநராக பணியாற்றி கொண்டே பல இருசக்கர வாகனங்களை திருடியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். நரேஷ் அளித்த தகவலின் அடிப்படையில், 13 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து நரேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்