கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் - கொரோனா பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருப்பு

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் மாநில எல்லையான களியக்காவிளையில் கொரோனா பரிசோதனைக்கர்க பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் - கொரோனா பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருப்பு
x
கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.  களியக்காவிளை வரும் பயணிகள் காவல்துறை கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு இ பாஸ் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருவனந்தபுரம் வரும் பயணிகள, கேரள அரசு பேருந்து மூலம் களியக்காவிளை அழைத்து வரப்படுகின்றனர். ஆனால் பலரிடம் இ பாஸ் இரூப்பதில்லை. இ பாஸ் கிடைத்த பிறகே அவர்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளை  தமிழகத்திற்கு அழைத்து வரும் முன்பே இ பாஸ் உள்ளதா என கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்