விவசாயிகளிடம் இருந்து விளைபொருளை நேரடி கொள்முதல் செய்ய கோரிய வழக்கு - தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு

ஊரடங்கு காலத்தில் மட்டும் விவசாயிகளிடமிருந்து 2 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விவசாயிகளிடம் இருந்து விளைபொருளை நேரடி கொள்முதல் செய்ய கோரிய வழக்கு - தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு
x
இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் ஊரடங்கு அறிவித்ததும், விவசாயிகளிடம் இருந்து, காய்கறி, பழங்கள் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வாகனங்கள் மூலம் 6ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் மக்களுக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளதாகவும்,

* உழவர் சந்தைகள் மூலம் ஆயிரத்து 400  மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்கப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால், பல மாவட்டங்களில் இருந்து தினமும் 500 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் கொள்முதல் செய்து, சென்னை நகர மக்களுக்கு விற்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், ஊரடங்கு காலத்தில் மட்டும் 37 ஆயிரத்து 635 விவசாயிகளிடமிருந்து 2 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, 

* விவசாயிகளுக்கு 522 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

* இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 18ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



Next Story

மேலும் செய்திகள்