படகு புரோப்பல்லர் தயாரிப்பு பணி தொய்வு - லேத் பட்டறை உரிமையாளர்கள் வேதனை

ராமேஸ்வரத்தில், படகு புரோப்பல்லர் தயாரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக லேத் பட்டறை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
படகு புரோப்பல்லர் தயாரிப்பு பணி தொய்வு - லேத் பட்டறை உரிமையாளர்கள் வேதனை
x
கொரோனா ஊரடங்கு மற்றும் தடை காலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. அதற்கு பதிலாக, படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், படகு இயந்திரத்தின் விசிறி தயாரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. போதிய பொருட்கள் கிடைக்காததால் புதிய புரோப்பல்லர்களை தயாரிக்க முடியவில்லை எனக் கூறும் பட்டறை தொழிலாளர்கள், ஏற்கனவே, பழுதான இயந்திரங்களை சீரமைத்து தருவதாக கூறுகின்றனர். புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏற்கனவே, ஆர்டர் எடுத்து, புதிதாக செய்யப்பட்ட புரோப்பல்லர்கள் எடுத்த செல்ல முடியாமல் தேங்கி கிடப்பதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்