ரயில், விமான நிலையம் செல்ல ஆட்டோக்களுக்கு அனுமதி - தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு பயணிகளை ஏற்றி செல்ல டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ரயில், விமான நிலையம் செல்ல ஆட்டோக்களுக்கு அனுமதி - தமிழக அரசு அரசாணை வெளியீடு
x
சென்னை மாநகர காவல் எல்லை தவிர, தமிழகம் முழுவதும், கடந்த 23ம் தேதி முதல் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், ஒரு பயணியை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முதல் உள்நாட்டு விமான சேவை துவக்கப்பட்டுள்ளதால், சென்னையில், விமான நிலையத்திற்கு செல்வோர், ஆட்டோ, டாக்சி இல்லாமல், பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து, தற்போது தமிழகம் முழுவதும் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்ல டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்