கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அரசு திட்டம் - "மே 25 - ல் 1.5 லட்சம் பி.சி.ஆர் கிட்கள் வருகிறது"

தமிழகத்தில், நாள்தோறும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அரசு திட்டம் - மே 25 - ல் 1.5 லட்சம் பி.சி.ஆர் கிட்கள் வருகிறது
x
தமிழகத்தில், நாள்தோறும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, பி.சி.ஆர். கிட் மூலமாக, 3 லட்சத்து 85 ஆயிரத்து185 மாதிரிகள், பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனிடையே, தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பரிசோதனையை  அதிகரிக்க,  கூடுதலாக 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை உலகின் பல்வேறு நிறுவனத்திடம்  வாங்க அரசு  நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில் முதற்கட்டமாக தென்கொரிய நிறுவனத்திடமிருந்து  ஒரு லட்சம் பி.சி.ஆர். கிட் கடந்த வாரம் தமிழகம் வந்த நிலையில், வரும் திங்கள் முதல், வாரந்தோறும் ஒன்றரை லட்சம் கருவிகள் வர உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்