3-வது பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற பெண் - கர்ப்பப்பையில் பஞ்சை வைத்து அனுப்பிய அரசு மருத்துவர் - நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் கணவன் புகார்

தேனி மாவட்டம் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சிகிச்சைக்கு சென்ற தனது மனைவியின் கருப்பையில் பஞ்சை வைத்து அனுப்பிவிட்டதாக, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார் அளித்துள்ளார்.
3-வது பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற பெண் - கர்ப்பப்பையில் பஞ்சை வைத்து அனுப்பிய அரசு மருத்துவர் - நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் கணவன் புகார்
x
கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி வாஞ்சிநாதன். இவர் தனது மனைவி  முத்துச்செல்வியை மூன்றாவது பிரசவத்துக்காக கடந்த மாதம் 23 ஆம் தேதி கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காரில் அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையை அடைந்தபோது காரிலேயே முத்துச்செல்விக்கு பெண் குழந்தை பிறந்தது. தொப்புள் கொடியை வெட்டி செவிலியர்கள் முதலுதவி செய்த நிலையில், முத்துச்செல்வியை, பெண் மருத்துவர் பரிசோதித்துள்ளார். அப்போது அலட்சியமாக நடந்து கொண்டதோடு, தகாத வார்தைகாளால் திட்டவும் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கருப்பையை சுத்தம் செய்த  பெண் மருத்துவர், அதில் பஞ்சை கவனக் குறைவாக வைத்து அனுப்பியுள்ளார். அவரது அறிவுரைப்படி கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துச்செல்வி, கடந்த மாதம் 27 ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் முத்துச்செல்வி வலியால் துடித்துள்ளார்.  உடனே அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதித்து பார்த்த போது, கருப்பையில் பஞ்சு வைத்து அனுப்பிய விவரம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கவனம் இல்லாமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட  முத்துச்செல்வியின் கணவர் வாஞ்சிநாதன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்