கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம், சானிடைசர் - விநியோகம்

கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், பொதுமக்கள் தாங்களாகவே, முக கவசம் மற்றும் சானிடைசர்களை தயாரித்து விநியோகம் செய்து வருகின்றனர்.
கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம், சானிடைசர் - விநியோகம்
x
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 225 மகளிர் சுய உதவிக்குழுக்கள், கடந்த 10 நாட்களில், 4 லட்சம் முக கவசங்களை இரவு பகலாக தயாரித்து, குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதே போல், 2 ஆயிரத்து 500 லிட்டர் கிருமி நாசினிகளை தயாரித்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். 
=========

தூத்துக்குடி

தூத்துக்குடியில்  தையல் தொழிலாளர்கள், முககவசங்கள் தயாரித்து குறைந்த அளவிலான வருமானம் ஈட்டி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால்,  வெளியே செல்ல முடியாத நிலையிலும்,  வருமானம் ஈட்டி, வறுமையை போக்கி வருவதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். 
======
ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே முகவூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில், முனியசாமி என்ற பஞ்சாயத்து தலைவர், சுரேஷ் என்கிற துணை தலைவர் ஆகியோர் கிருமிநாசினி தெளித்து இலவச முக கவசங்களை வழங்கி வருகின்றனர். 
=====
மதுரை

மதுரை காமராஜர் சாலையில் மெடிக்கல் ஷாப் நடத்தி வரும் ஆறுமுகம் என்பவர் 350 ரூபாய் அளவிலான சானிட்டைசர்களை 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். மேலும், மருந்து வாங்க வருபவர்கள் சமூக இடைவெளி விட்டு நின்றால் மட்டுமே இங்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. 
======


Next Story

மேலும் செய்திகள்