உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு தற்காலிக அனுமதி - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
பதிவு : மார்ச் 23, 2020, 07:25 PM
கொரோனா பாதிப்பு காரணமாக, உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக ஜூலை 31-ம் தேதி வரை இயக்க அனுமதி அளிக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி,  சுரேஷ்குமார் அமர்வில்  மீணடும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உரிமம் கோரி விண்ணப்பித்த 690 குடிநீர் ஆலைகளில் 121 ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உரிமம் கோரி விண்ணப்பித்த தகுதியுடைய  குடிநீர் ஆலைகளை, தற்காலிகமாக ஜூலை 31ம் தேதி வரை இயங்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் இதுதொடர்பாக ஓரிரு நாளில் அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இந்த ஆலைகள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதம் தண்ணீரை  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் என அரசுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

600 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

224 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

45 views

பிற செய்திகள்

தேவையில்லாமல் சாலையில் சுற்றியவர்களுக்கு தண்டனை

விழுப்புரத்தில் தேவையில்லாமல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்த இளைஞர்களை தங்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யுமாறு போக்குவரத்து காவலர்கள் தண்டனை வழங்கினர்.

36 views

போலீசார், செவிலியர்களுக்கு உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிகையில் ஈடுபட்டுள்ள காவல்துறை, தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களின் சேவையை பாராட்டும் விதமாக, விஜய் ரசிகர் மன்றும் சார்பில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

19 views

தந்தி டிவி செய்தி எதிரொலி : நாடோடி மக்களுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ

செய்யாறு அருகே எருமைவெட்டி கிராமத்தில் உணவின்றி தவித்து வந்த தெலங்கானா மாநில நாடோடி மக்களுக்கு, தந்தி டிவி செய்தி எதிரொலியாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

24 views

ஒடிசா தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் தமமுக-வினர்

கொரனோ வைரஸ் காரணமாக சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை, திருமுடிவாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த 50-க்கும் மேற்பட்ட ஒடிசா மாநில தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வந்தனர்.

8 views

முதலமைச்சர் பழனிசாமி உடன் பிரதமர் மோடி ஆலோசனை : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

கொரோனாவால், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களோடு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

16 views

தமிழகத்தில் ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.