அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டில் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த பட்ஜெட்டில் ஆறாயிரத்து 991 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
x
வரும் நிதியாண்டில் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த பட்ஜெட்டில்  ஆறாயிரத்து 991 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கிராமங்களில் குளங்கள் மற்றும் ஊரணிகள் ஆழப்படுத்துதல் மற்றும் நகர்​புறங்களில் கோவில் குளங்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அத்திக்கடவு, அவிநாசி நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பட்ஜெட்டில் 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்