பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரம் :"எடுக்கப்பட்டுள்ள சட்ட முடிவுகள் என்ன?" - பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள சட்ட முடிவுகள் குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரம் :எடுக்கப்பட்டுள்ள சட்ட முடிவுகள் என்ன? - பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை திரும்ப பெறக் கோரிய வழக்கில், புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு, நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ராஜீவ் கொலை வழக்கில் குறிப்பாக வெடிகுண்டு விசாரணையில், விசாரணையின் ஒரு பகுதியாக இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், எப்போது புதிய அறிக்கையை தாக்கல் செய்ய போகிறீர்கள் என சிபிஐயிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, சிபிஐ புதிய அறிக்கையை எப்போது கொடுக்கும் என்பது தெரியாததால், என்ன நிவாரணம் வேண்டும் என பேரறிவாளன் தரப்பினரிடமே கேள்வி எழுப்பினர்.  

அப்போது, பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட முடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தற்போது தமிழக ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் பேரறிவாளன் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள சட்ட ரீதியிலான முடிவுகள் குறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்