ஊட்டியில் பனி சீசன் துவக்கம் - மலர் செடிகள், மரக்கன்றுகளை பாதுகாக்க நடவடிக்கை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பனி சீசன் துவங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் பனி சீசன் துவக்கம் - மலர் செடிகள், மரக்கன்றுகளை பாதுகாக்க நடவடிக்கை
x
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பனி சீசன் துவங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் கனமழையால் இந்தாண்டு பனி சீஸன் சற்று தாமதமாக துவங்கியுள்ள நிலையில், இன்று காலை முதல் நீர்பனி கொட்டி வருகிறது. காலை வேளையில் மூடு பனி நிலவியதால் ஊட்டி மலைப்பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன. பனியின் தாக்கத்தில் இருந்து மலர் செடிகள், தேயிலை பயிர்களை பாதுகாக்க, இலை சரிகுகள் போட்டு மூடி வருகின்றனர். மேலும், வனத்துறை சார்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மீது போர்வை, இலை சரகுகள் போட்டு பாதுகாத்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்