வாக்கு எண்ணிக்கை தொடர்பான திமுக வழக்கு : அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவு

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடர்பான திமுக வழக்கு : அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவு
x
வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடுகளை தடுக்கும் விதமாக கண்காணிப்பு கேமரா பொருத்தி பதிவு செய்தல் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரி, திமுக உள்ளிட்ட கட்சிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில்,11 வழக்குகளை தொடர்ந்தன. நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கில், பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவிட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. இதேபோல், தேர்தல் ஆணையத்துக்கு உதவ அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்து இருப்பதாக கூறியது. இதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையை இரு கேமராக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும் என்ற நீதிபதி, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறி, உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கத் தேவையில்லை என வழக்கை முடித்து வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்