போலி காசோலை மூலம் ரூ.68 லட்சம் மோசடி - 2 பேரை கைது

கோவை கார்ப்பரேசன் வங்கியில், போலி காசோலை தயாரித்து 68 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
போலி காசோலை மூலம் ரூ.68 லட்சம் மோசடி - 2 பேரை கைது
x
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த சந்திர மோகன் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கார்ப்பரேசன் வங்கியில், 3 கணக்கு வைத்துள்ளார். இவர், அவ்வங்கி உதவி மேலாளர் சைன் ஜோஸ் என்பவருடன் சேர்ந்து போலி காசோலை தயாரித்து 6 தவணையாக 68 இலட்சம் ரூபாய் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார். இதையடுத்து கார்ப்பரேசன் வங்கி மண்டல மேலாளர் சீனிவாசன் மாநகர குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில், 
உதவி மேலாளர் சைன் ஜோஸை, கைது செய்த போலீசார், தற்போது சந்திரமோகனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மோசடி செய்த பணத்தில் வீடு கட்டியதோடு, வட்டிக்கு கடன் வழங்கியதும் தெரியவந்தது. மோசடிக்கு உடந்தையாக இருந்த சந்திரமோகனின் தம்பி சுரேஷை, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்