"விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" - நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

விடுமுறை நாட்களில் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
x
விடுமுறை நாட்களில் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் செயல்படுகிறது என புகார் எழுந்துள்ளது. தேர்தல் நாளான நேற்று உள்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகிறது என கூறிய நிலையில், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மட்டும் பாடம் நடத்துவதாக தனியார் பள்ளிகள் கூறியதாக தெரிவித்தார். மேலும், கல்வித்துறையின் சுற்றறிக்கையை மீறி விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்