கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு விமான டிக்கெட் விலை கடும் உயர்வு

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
x
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளது. வரும் 30, 31ஆம் தேதிகளில் விமான டிக்கெடுகள் மொத்தமும் விற்று தீர்ந்து விட்டன. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 13 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு  9 ஆயிரத்து 700 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோயமுத்தூருக்கு ரூ.3 ஆயிரத்து 700 ரூபாய் முதல்  6 ஆயிரம் ரூபாய் வரை  கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  இதே போல் கொச்சி, திருவனந்தபுரம், ஹுப்ளி, பெங்களூரு  உள்ளிட்ட நகரங்களுக்கான டிக்கெட் விலை இருமடங்கு வரை உயர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்