நேபாள பெண்ணுக்கு மறுவாழ்வு த‌ந்த மதுரை

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட நேபாள பெண்ணுக்கு மதுரை மருத்துவமனையில் மறுவாழ்வு கிடைத்துள்ள நிலையில், ராசிபுரத்தில் ஆசிட் வீசி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள பெண்ணுக்கு மறுவாழ்வு த‌ந்த மதுரை
x
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட நேபாள பெண்ணுக்கு மதுரை
மருத்துவமனையில் மறுவாழ்வு கிடைத்துள்ள நிலையில், ராசிபுரத்தில் ஆசிட் வீசி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் தாக்குதலின் பயங்கரத்தை விவரிக்கிறது. 

ஆசிட்... 

கழிவறை கறைகளை அகற்ற பயன்படுத்தப்படும் அமிலம், பல பெண்களின் வாழ்க்கையை சிதைத்திருக்கிறது.  ஆசிட் வீசப்படும் சினிமா காட்சிகள்... வழக்கு எண் உதாரணத்திற்கு... தனக்கு கிடைக்காத பெண்ணை அழிக்க துடிக்கும், மனித உருவிலான சில கொடூர மிருகங்கள் , இந்த அமிலத்தை பயன்படுத்தி, நொடிப்பொழுதில் அந்த பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகின்றனர்... டெல்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணை குட்டா என்பவன் ஒருதலைக்காதல் வன்மத்தில், ஆசிட் வீசி அவரது முகத்தை சிதைத்தான். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் கடைகளில் ஆசிட் விற்பதற்கு தடை விதித்த‌து உச்சநீதிமன்றம்...  ஆசிட் தாக்குதலுக்கு பிறகு லட்சுமி அகர்வால் சந்தித்த துயரங்களையும், அதிலிருந்து மீண்டு வந்த‌தையும் மையக்கருத்தாக கொண்டு சப்பாக் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. லட்சுமி அகர்வாலாக படத்தில் வாழ்ந்திருக்கிறார், தீபிகா படுகோனே...

Next Story

மேலும் செய்திகள்