தேனி : லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்த வேல்முருகன், தனது மனைவி மாரியம்மாள், குழந்தை காளீஸ்வர பாண்டியன் ஆகியோருடன் சின்னமனூருக்கு பைக்கில் சென்றுள்ளார்.
தேனி : லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
x
தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்த  வேல்முருகன், தனது மனைவி மாரியம்மாள், குழந்தை காளீஸ்வர பாண்டியன் ஆகியோருடன் சின்னமனூருக்கு பைக்கில் சென்றுள்ளார். வீரபாண்டி அருகே உப்பார்பட்டி விளக்கு பகுதியில், தேனி நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி ஒன்று மோதியதில், லாரியின் பின் டயரில் மூவரும் சிக்கியதோடு, சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில், மனைவி குழந்தை கண் எதிரிலேயே வேல்முருகன் பலியானார். மாரியம்மாள் மற்றும் குழந்தை காளீஸ்வரன் இருவரும் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த விபத்தின், சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்