சுங்க கட்டணம் மையம் அமைக்க தடை கோரிய வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட அரசு

மதுரையில் சுங்க கட்டண மையம் அமைக்க தடை கோரிய வழக்கில், அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சுங்க கட்டணம் மையம் அமைக்க தடை கோரிய வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட அரசு
x
மதுரை மாவட்டம் மஸ்தான்பட்டியில் இருந்து விமான நிலையம் வரை 27 கிலோ மீட்டர் தூரத்தில் மூன்று சுங்க கட்டண மையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனை ரத்து செய்ய கோரி மதுரை கேகே நகரை சேர்ந்த இம்மானுவேல் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இதில் நான்கு வழிச்சாலையில் 60 கிலோ மீட்டர் தூரத்தில் தான் டோல்கேட் மையம் அமைக்க வேண்டும் என்ற தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதி இருப்பதை சுட்டி காட்டியுள்ள அவர், தற்போது 27 கிலோ மீட்டர் தூரத்தில் மூன்று சுங்க கட்டண மையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனுவிற்கு பதில்மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணை டிசம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்