5வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை : காயங்களுடன் உயிர் பிழைத்த அதிசயம்

சென்னை யானைக்கவுனி மின்ட் சாலையில், 5வது மாடியிலிருந்து விழுந்த 8 மாத குழந்தை, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.
5வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை : காயங்களுடன் உயிர் பிழைத்த அதிசயம்
x
மெய்பால் - நீலம் தம்பதி, 8 மாத குழந்தையான ஜிநிஷாவுடன், குடியிருப்பில் 5வது மாடியில் வசித்து வருகின்றனர். மெய்பால் வெளியூர் சென்றிருக்க, நீலம் குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார். நீலம் சமைத்து கொண்டிருந்த போது, பால்கனியில் தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை, பால்கனி கிரில் இடைவெளியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது. இதில் குழந்தை கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் இருக்கையில் விழுந்ததால், லேசான காயத்துடன் உயிர் தப்பியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்