மின் இணைப்பின்றி தவிக்கும் ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் பகுதியில், கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஜஸ் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பின்றி தவிக்கும் ராமேஸ்வரம்
x
ராமேஸ்வரம் பகுதியில், கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஜஸ் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.  மண்டபம் பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டிய போது பூமிக்கு அடியில் இருந்த உயர் அழுத்த மின் வயர் சேதமடைந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போதுவரை மின் இணைப்பு சீர் செய்யவில்லை என்பதால், நகரம் முழுவதும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் முக்கிய தொழிலான மீன்பிடித் தொழிலுக்கு,  ஐஸ்கட்டி கிடைக்கவில்லை என்பதால், சுமார் 800 மீன்பிடி படகுகள் கடலுக்குள் செல்லவில்லை என் கூறப்படுகிறது. மின் இணைப்பை உடனடியாக சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்