"அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் " - மாணவிகளுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுரை

அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.
x
அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் சார்பாக, சென்னை எழும்பூரில், மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தவறு நடந்தால், பெண்கள் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களை பின்தொடரக் கூடாது என்றும் மாணவிகளுக்கு ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்