20 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய கொல்லப்பட்டி புதூர் ஏரி : ஒருநாள் மழையில் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால், 20 ஆண்டுகளுக்கு பின் கொல்லப்பட்டி புதூர் ஏரி நிரம்பியது.
20 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய கொல்லப்பட்டி புதூர் ஏரி : ஒருநாள் மழையில் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால், 20 ஆண்டுகளுக்கு பின் கொல்லப்பட்டி புதூர் ஏரி நிரம்பியது.  நீர்வரத்துக் கால்வாய்,  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் கொல்லப்பட்டி புதூர் ஏரிக்கு நீர்வரத்து இன்றி, வறண்டு காணப்பட்டது.  இதனிடையே, நேற்றிரவு பெய்த கனமழையால்,  20 ஆண்டுகளுக்கு பின்னர், முழுமையாக ஏரி நிரம்பியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் மழைநீரை மலர்தூவி வரவேற்றதுடன்,  கிடா பலியிட்டு சுவாமி கும்பிட்டனர். மேலும், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்