"டெங்கு காய்ச்சல் - சென்னையில் 531 பேர் பாதிப்பு"

உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி பதில் மனு தாக்கல்
டெங்கு காய்ச்சல் - சென்னையில் 531 பேர் பாதிப்பு
x
சென்னையில் 531 பேர் டெங்கு  காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த ஏழு மாதங்களில் ஆயிரத்து 941 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு,  76 ஆயிரத்து 964 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏடிஸ் கொசு உற்பத்தியை கட்டுபடுத்தாத, 449 வீட்டு உரிமையாளர்களுக்கு 89 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்