"மணல் கடத்தல் தொடர்பான வழக்கு : பொது நல மனு திரும்ப பெறப்பட்டது ஏன்?"

சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடை கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தவர்,மனுவை வாபஸ் பெற்றது தொடர்பாக விளக்கமளிக்க நேரில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மணல் கடத்தல் தொடர்பான வழக்கு : பொது நல மனு திரும்ப பெறப்பட்டது ஏன்?
x
ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைக்குட்டத்தைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர், நாமங்கள் கிழக்குக் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம்,   13 மாவட்டங்களில் சவடு மண் அள்ள மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததது. அப்போது மனுதாரர் தரப்பில் பதிவாளரிடம் இடைக்கால தடையை குறிப்பிடாமல், பொதுநல மனுவை திரும்ப பெறுவதாக கடிதம் அளித்ததையடுத்து நீதிபதிகள் மனுவை திரும்ப பெற அனுமதி அளித்தனர். இந்த வழக்கில்  தன்னையும் மனுதாரராக சேர்க்க கோரி வழக்கறிஞர் கிரிராஜன் நீதிபதிகளிடம் முறையிட்டார். மேலும் இடைக்கால தடை உள்ள நிலையில் பொதுநல மனுவை திரும்ப பெறுவது ஏற்க கூடியது அல்ல என தெரிவித்தார். பொதுநல வழக்கில் இடைக்கால உத்தரவு இருக்கும் நிலையில் அரசு தரப்பில் மனுவை வாபஸ் பெற எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுதாரரை அக்டோபர் 11 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்