15 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில் அதிரடி திருப்பம்

பெரம்பலூர் பா.ஜ.க பிரமுகரை கைது செய்து தாக்கிய சம்பவம்
15 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில் அதிரடி திருப்பம்
x
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகரை, கைது செய்து காவல் நிலையத்தில் தாக்கியது தொடர்பாக, உதவி ஆய்வாளர் மீதான புகாரை மத்திய மண்டல ஐ.ஜி. விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மனுதாரர் துன்புறுத்தப்பட்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதால், இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய வேண்டும் என கூறினார். இது தொடர்பான புகாரை, நான்கு வாரங்களில் மத்திய மண்டல ஐ.ஜி.,யிடம் மனுதாரர் அளிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, அந்த புகார் மீது 8 வாரங்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்