ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா

பூங்காவுக்கு ரூ.396 கோடி நிதி ஒதுக்கீடு
ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா
x
ஆசியாவிலேயே மிகப் பெரிய உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்கா சேலத்தில் அமைப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தலைவாசல் கூட்டு சாலையையொட்டி அமைந்துள்ள, கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பளவில், 396 கோடி ரூபாய் செலவில் நவீன பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு அமைய உள்ள ஆராய்ச்சி மையத்தில், மீன், ஆடு, மாடு மற்றும் கோழிகள் வளர்ப்பு, கலப்பின மாடுகள் உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.  ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, கால்நடை பூங்காவிற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 1 கோடியே 87 லட்சம் ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்