சுஜித் மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

ஆழ்துளை கிணற்றில் சுஜித் சடலமாக மீட்கப்பட்டது மனவேதனை தருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சுஜித் மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
x
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் சடலமாக மீட்கப்பட்டது, மனவேதனை தருகிறது  என்றும், ஆழ்துளை கிணறு அமைக்கும் போது விதிகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதில் கவனக்குறைவு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க  ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர், உயிரிழந்த சுஜித்தின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்