நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றி

நாங்குநேரி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை, 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றி
x
நாங்குநேரி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை, 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 21 ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், எண்ணும் பணி, காலை 8 மணிக்கு துவங்கியது. 22 சுற்றுகள் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், ரெட்டியார்பட்டி நாராயணன் 94 ஆயிரத்து 484 வாக்குகள் பெற்றார். ரூபி மனோகரனுக்கு 62 ஆயிரத்து 172 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர், 2 ஆயிரத்து 802 வாக்குகள் பெற்றார். எனவே, 32 ஆயிரத்து 312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்று, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாங்குநேரி தொகுதியை கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்