கனமழை எச்சரிக்கை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு

பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
x
பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மழை மற்றும் அணைகளின் நிலவரங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து, உடனுக்குடன் தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும், முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்