நாங்குநேரி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா என புகார் : திமுக எம்.எல்.ஏ உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்ததாக திமுக எம்எல்ஏ சரவண குமார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
நாங்குநேரி இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்ததாக திமுக எம்எல்ஏ சரவண குமார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட அம்பலம் கிராமத்தில் நெற்று மக்களுக்கு பண பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் கூறப்பட்டது.  ஒரு வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கு சிதறி கிடந்த 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திமுக பெரியகுளம் எம்எல்ஏ சரவண குமார் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தன்னை தாக்கியதாக, 25 பேர் மீது சரவண குமார் புகார் அளித்துள்ளார். இதனிடையே, அம்பலம் கிராமத்தில் பணப்பட்டுவாடா புகார் குறித்து அறிக்கை தருமாறு மாவட்ட ஆட்சியருக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்