தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கம்

கோவை - பொள்ளாச்சி உள்பட தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லியில் இருந்து காணொலி மூலம், புதிய ரெயில் சேவையை மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார்.
x
நாட்டின் சிறிய நகரங்களை, ரெயில் சேவை மூலம் இணைக்கும் வகையில், 10 புதிய ரெயில் சேவை துவக்கப்பட்டு உள்ளது. இதன்படி, தமிழகத்தில், 3 புதிய ரெயில்சேவையை,  புதுடெல்லியில் இருந்து காணொலி மூலம், புதிய ரெயில் சேவையை மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார். 

சேலம் - கரூர் இடையே ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்திற்கு 6 நாட்கள் மட்டும் இந்த புதிய ரெயில் இயங்கும். சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில்,  பிற்பகல்  3.25 மணிக்கு கரூர் சென்றடையும். மறுமார்க்கமாக, கரூரில் இருந்து  நண்பகல் 11.40 மணிக்கு புறப்பட்டு இந்த ரெயில் மதியம் 1.25 மணிக்கு சேலம் செல்லும். கோவை - பழனி இடையே, புதிய ரெயில் சேவை தினமும் இயக்கப்படும். இதன்படி, கோவையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், மாலை 4.40 மணிக்கு பழனி சென்றடையும். மறுமார்க்கமாக பழனியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 2.10 மணிக்கு கோவை சென்றடையும்.

பொள்ளாச்சி - கோவை இடையே ஞாயிற்றுக்கிழமை தவிர, எஞ்சிய 6 நாட்களுக்கு புதிய ரெயில் இயக்கப்படும். பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 8.40 மணிக்கு கோவை சென்றடையும். மறு மார்க்கமாக கோவையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 7 மணிக்கு, பொள்ளாச்சி செல்லும். இந்த 3 புதிய ரெயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இருக்கும். எனவே, நீண்ட காலமாக காத்திருந்த கொங்கு மண்டல மக்களுக்கு, இந்த 3 புதிய ரெயில் சேவை, மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்