4 மாதங்களுக்கு பிறகு புழல் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தொடக்கம்

4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் புழல் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
4 மாதங்களுக்கு பிறகு புழல் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தொடக்கம்
x
4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் புழல் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புழல் ஏரி வறண்டதால், கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி முதல், குடிநீர் அனுப்ப முடியவில்லை. இந்த நிலையில், அண்மையில் பெய்த மழையால் புழல் ஏரியில், தற்போது 55 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதனையடுத்து 4 மாதங்களுக்கு பிறகு,  ஏரியில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் வினாடிக்கு, 5 கனஅடி வீதம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இந்த நீர்,  சென்னையின் குடிநீருக்காக, சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்