நீட் ஆள்மாறாட்டம் - நீதிபதிகள் அதிரடி

அதிகாரிகள் துணையின்றி, நீட் ஆள்மாறாட்டம் நடத்திருக்க வாய்ப்பில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
நீட் ஆள்மாறாட்டம் - நீதிபதிகள் அதிரடி
x
காலியாக உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தமிழகத்தில், நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர், எவ்வளவு பணம் பரிமாற்றம் நடந்துள்ளது,

ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் யார் யார்?  என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். 

அதிகாரிகள் துணையின்றி ஆள்மாறாட்டம் நடந்திருக்க முடியாது, என கூறிய நீதிபதிகள், இதுதொடர்பாக அக்டோபர் 15ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடிக்கு  உத்தரவிட்டனர்.

நாடு முழுவதும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று கூறிய நீதிபதிகள், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து அவர்களும் பதிலளிக்குமாறு  உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்