580 கிராம் எடையுடன் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை : அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பு - தாய் நெகிழ்ச்சி

குறைபிரசவத்தில் 580 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை 5 மாதங்கள் மருத்துவ கண்காணிப்பில் வைத்து, பராமரித்து தாயிடம் ஒப்படைத்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
580 கிராம் எடையுடன் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை : அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பு - தாய் நெகிழ்ச்சி
x
நாகை மாவட்டம், சாமந்தன் பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த லதா என்பவருக்கு கடந்த மே மாதம் நாகை அரசு மருத்துவமனையில் குறை பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தையின் எடை  580 கிராம் மட்டுமே இருந்ததால், காப்பாற்ற முடியுமா என்ற நிலையில்,  5 மாதங்களாக பச்சிளம் குழந்தை சிறப்பு பிரிவில் வைத்து மருத்துவர்கள் பராமரித்து வந்தனர். தற்போது குழந்தையின் எடை  2 கிலோ 100 கிராம் எட்டியதை தொடர்ந்து, தாயிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால், மகிழ்ச்சியடைந்த குழந்தையின் தாய் லதா, மருத்துவர்களின் சாதனையை எந்த நாளும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியடைந்தார். இதற்கு முன், 380 கிராம் எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றியது இந்தியாவில் சாதனையாக இருந்த நிலையில், தற்போது  580 கிராம் எடையில் பிறந்த குழந்தையை நாகை அரசு மருத்துவமனை காப்பாற்றி சாதனை செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்