மயிலுடன் சண்டையிட்டு படுகாயம் அடைந்த பாம்பு : பாம்புக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள்

கடலூர் அருகே காரைக்காடு பிரதான சாலையில் மயிலுடன் சண்டையிட்ட பாம்பு ஒன்று படுகாயங்களுடன் அருகில் உள்ள பெயிண்ட் கடையில் புகுந்தது.
மயிலுடன் சண்டையிட்டு படுகாயம் அடைந்த பாம்பு : பாம்புக்கு  சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள்
x
கடலூர் அருகே காரைக்காடு பிரதான சாலையில் மயிலுடன் சண்டையிட்ட பாம்பு  ஒன்று படுகாயங்களுடன் அருகில் உள்ள பெயிண்ட் கடையில் புகுந்தது.  கடை உரிமையாளர் அளித்த  தகவலை அடுத்து பாம்பு பிடிக்கும் செல்லா அந்த  6 அடி நீள நல்ல பாம்பை  பிடித்து புதுப்பாளையம்  கால்நடை பெரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அந்த  பாம்புக்கு கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். பாம்பின் காயத்திற்கு ஆண்டி பயாட்டிக் மற்றும் வலிநிவாரண ஊசிகள் போடப்பட்டன. காயத்துக்கு மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்