சிறுமிக்கு வழங்கிய மாத்திரையில், செம்புக் கம்பி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாத்திரையில் செம்பு கம்பி இருந்ததைக் கண்டித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமிக்கு வழங்கிய மாத்திரையில், செம்புக் கம்பி
x
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாத்திரையில் செம்பு கம்பி இருந்ததைக் கண்டித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோரூர் கிராமத்தைச் சேர்ந்த தனலெட்சுமி என்பவர் தமது மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, புள்ளிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டுக்கு வந்த பிறகு, மாத்திரையை உடைத்தபோது, அதில், செம்புக் கம்பி இருந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள், கிராம மக்களுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். மருத்துவர் மற்றும் செவிலியரிடம் கேள்வி எழுப்பியதற்கு அலட்சியமாக பதிலளித்ததாக கூறிய அவர்கள், போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். முழு மாத்திரையை அப்படியே சாப்பிட்டிருந்தால், குழந்தையின் நிலைமை என்னவாகி இருக்கும் என்பதே அவர்களின் கேள்வி.

Next Story

மேலும் செய்திகள்