ஒரு மூட்டை யூரியா ரூ. 266.50 என நிர்ணயம்

எதிர்வரும் ராபி பருவத்திற்காக, தமிழ்நாட்டிற்கு 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒரு மூட்டை யூரியா ரூ. 266.50 என நிர்ணயம்
x
எதிர்வரும் ராபி பருவத்திற்காக, தமிழ்நாட்டிற்கு  6 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, இந்த ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டிற்கு, 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியா கிடைக்கும். 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டை, 266 ரூபாய் 50 காசு என்ற விலையில், விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.  தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள " உழவன் கைபேசி" மூலம், கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பை அறிந்து கொண்டு, ஆதார் கார்டை காட்டி, தங்களுக்கு தேவையான உரங்களை பெற்றுக்கொள்ளலாம் என, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்