தமிழகத்தில் முதல் முறையாக ஐ.நா.வில் பேச போகும் அரசுப் பள்ளி மாணவி

தமிழகத்தில் முதல் முறையாக அரசு பள்ளி மாணவிக்கு, ஐநா மனித உரிமை கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.
x
தமிழகத்தில் முதல் முறையாக அரசு பள்ளி மாணவிக்கு, ஐநா மனித உரிமை கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது. மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி பிரேமலதா, பத்து ஆண்டுக்கு முன் 6ஆம் வகுப்பு படிக்கும்போதே, மனித உரிமை கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியுள்ளார். இந்நிலையில்,  அக்டோபர் ஒன்று மற்றும் இரண்டாம் தேதி ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுமாறு அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இது தனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது என பிரேமலதா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்