கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் - ஸ்டாலின்

இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து தொடங்குகிறது என்ற வரலாற்று அறிஞர்களின் கூற்றை கீழடி ஆய்வு உறுதி செய்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
x
இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து தொடங்குகிறது என்ற வரலாற்று அறிஞர்களின் கூற்றை கீழடி ஆய்வு உறுதி செய்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கீழடியில் நடைபெறும் 5ஆம் கட்ட ஆய்வு பணிகள், அங்கு கண்டெடுக்கப்பட்ட பண்டைய கால பொருட்களை ஸ்டாலின் பார்வையிட்டார். மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், உத்தரப்பிரதேசம், குஜராத்தை போல் கீழடி ஆய்வும் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்