"சில்லரை வர்த்தகத்தில் பணம் ஒரு பிரச்சினையாக இல்லை" - நிர்மலா சீதாராமன்

சில்லரை வர்த்தகத்தில் பணம் ஒரு பிரச்சனையாக இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சில்லரை வர்த்தகத்தில் பணம் ஒரு பிரச்சினையாக இல்லை - நிர்மலா சீதாராமன்
x
பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் குறு நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளுடன், டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். கடன் வழங்குவது, பணப்புழக்கம் மற்றும் மக்களின் தேவை குறித்து அதில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், சில்லரை வணிகத்தில் பணம் ஒரு பிரச்சினையாக இல்லை என்று தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகள் உள்பட அனைத்து நிதி அமைப்புகளிடமும் போதுமான பணம் கடன் வழங்க கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். ஒருசில துறைகள் தவிர பிற துறைகளின் செயல்பாடு பழைய நிலைக்கு திரும்பி உள்ளதாகவும், அடுத்த 6 மாதத்தில் பொருளாதார வளர்ச்சி சீரடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை 400 மாவட்டங்களில் செயல்படுத்த உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். முதற்கட்டமாக வரும் அக்டோபர் 3 முதல் 7 ஆம் தேதி வரை 250 மாவட்டங்களில் இந்த கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். பண்டிகை காலம் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும், சேவை துறையில் இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்