"தினத்தந்தி" செய்தி எதிரொலி : லாரி ஏறி பெண்ணின் கால்கள் நசுங்கிய விவகாரம் - மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை

லாரி ஏறி பெண்ணின் கால்கள் நசுங்கியது தொடர்பாக, தினத்தந்தியில் செய்தியை அடிப்படையாக கொண்டு, மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.
தினத்தந்தி செய்தி எதிரொலி : லாரி ஏறி பெண்ணின் கால்கள் நசுங்கிய விவகாரம் - மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை
x
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் அருகே உள்ள ஜோதிநகரை சேர்ந்த பிரியதர்சினி, இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, நிலை தடுமாறிய பிரியதர்சினி கீழே விழுந்ததில், எதிரே  வந்த லாரி ஏறி அவரது கால்கள் நசுங்கியது. இது குறித்து, தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 3 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்