"புயலே வந்தாலும் அதிமுக என்னும் கப்பல் கவிழாது" - விஜயபாஸ்கர்

அதிமுக என்னும் கப்பல் புயலே வந்தாலும் கவிழாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
அதிமுக என்னும் கப்பல் புயலே வந்தாலும் கவிழாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் அரசியல் பயணம் என்பது ஆர்ப்பரித்து எழும் அலையில், செலுத்தும் கப்பலை போன்றது என தெரிவித்தார். அதிமுக என்னும் கப்பல், புயலே வந்தாலும் கவிழாது என்று கூறிய அவர், கப்பல் லேசாக ஆடுகிறதே என எண்ணி, அதில் இருந்து குதித்தவர்கள் கரை ஏறியதாக வரலாறு இல்லை என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்