"+1, +2 வகுப்புகளுக்கு 5 பாடங்கள் முறை அமல்"

"6 பாடங்கள் 600 மதிப்பெண்கள் முறையும் இருக்கும்"
+1, +2 வகுப்புகளுக்கு 5 பாடங்கள் முறை அமல்
x
பதினொன்று மற்றும் 12ஆம் வகுப்புகளில் 5 பாடங்கள் மற்றும் 500 மதிப்பெண்கள் கல்விமுறை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 6 பாடங்களும், தலா 100 மதிப்பெண்களுடன் 600 மதிப்பெண்கள் வழங்கும் முறையும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, மாணவர்கள், தங்கள் விரும்பும் பாடப் பிரிவை தேர்வு செய்தும், அதில், மொழிப் பாடங்கள் கட்டாயமாகவும் இருந்தன. தற்போது, அதற்கு இணையாக தலா 100 மதிப்பெண்களுடன், 5 பாட முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதோடு, மொழிப்பாடங்கள் இரண்டு இருக்கும் என்றும், தமிழ் கட்டாயமாகவும், வேறு ஏதேனும் ஒரு மொழிப் பாடம் அல்லது ஆங்கிலம் என 5 பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில், அனைத்து பிரிவுகளும் உள்ளன. இதோடு, ஆறு பாடங்கள் உள்ள வகுப்புகளும் இருக்கும் என்றும், மாணவர்கள் தங்கள் விருப்பம் போல், 5 அல்லது 6 பாடங்கள் உள்ள வகுப்புகளில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வித் திட்டம், அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்